திருவனந்தபுரம் : பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு உரிமை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் ப சிதம்பரம் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத போதும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 1 இடம் என மக்களவை தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார். பாஜக 14 நாட்களில் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய போதும் அதற்கு தேர்தல் அறிக்கை என பெயரிடாமல் மோடியின் கியாரண்டி (மோடியின் உத்தரவாதம்) என பெயரிட்டள்ளது.
அதன் மூலம் பாஜக நீண்ட நாட்களுக்கு அரசியல் கட்சியாக நிலைக்கப் போவதில்லை என தெரியவந்து உள்ளதாகவும் விரைவில் நரேந்திர மோடியின் வழிபாட்டு தளமாக மாறும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார். மோடியின் வழிபாட்டு முறை மெல்ல நாட்டில் புத்துயீர் பெற்று சர்வாதிகாரத்தின் உச்சமாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் அரசியலமைப்பு திருத்தலாம் என்றும் அதற்கு மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் ப சிதம்பரம் குறிப்பிட்டார். நாடு வரலாறு காணாத அளவில் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்றார்.
இதையும் படிங்க : கேரளாவில் அடுத்தடுத்து போலி வாக்குப்பதிவு சம்பவம்! தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம்! என்ன நடக்கிறது? - Lok Sabha Election 2024