அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியின் மிர்சாபூர் மாஃபியில் பாஜக நிர்வாகி பப்லு கான் என்பவரது அலுவலகம் உள்ளது. இங்கு இவர், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது, பப்லு கான் அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் ராம் பஜனையை வைத்துள்ளார்.
இது பக்கத்துக்கு வீட்டில் இருந்தவர்களுக்கு தொந்தரவை அளித்துள்ளது. இதனால் பக்கத்துக்கு வீட்டுக்காரர், பப்லு கானுடன் இதுகுறித்து விவாதம் செய்துள்ளார். அப்போது இரு தரப்புக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகியுள்ளது.
இதையும் படிங்க: வரகு பயிரை உண்டதால் 10 யானைகள் உயிரிழந்தனவா? மத்திய பிரதேச அரசின் விசாரணை தீவிரம்!
இதில், பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பப்லு கான் மற்றும் அவரது இரண்டு மகன்களை தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அயோத்தி கோட்வாலி இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் கூறுகையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட ரயீஸ் கான், ஜாவேத் கான் மற்றும் கைஃப் கான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்