ETV Bharat / bharat

பீகாரில் ஆளுங்கட்சி தலைவர் சுட்டுக் கொலை! மக்களவை தேர்தலுக்கு முன் கொடூரம்? அரசியல் பகையா? - Bihar JDU leader shot dead - BIHAR JDU LEADER SHOT DEAD

2ஆம் கட்ட மக்களவை தேர்தல் நாளை (ஏப்.25) நடைபெற உள்ள நிலையில், பீகாரில் ஐக்கிய ஜனதா தள இளம் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 1:07 PM IST

பாட்னா : பீகார் மாநிலம் புன்புன் பகுதியை சேர்ந்தவர் சவுரப் குமார். முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், பாட்னா அடுத்த பதியகோல் பகுதியில் நடந்த திருமண விருந்தில் கலந்து விட்டு சவுரப் குமார் தன் நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனங்களில் சவுரப் குமாரை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் துப்பாக்கிச் சூடு தக்குதல் நடத்தி உள்ளது. இதில் சவுரப் குமார் மீது 5 குண்டுகள் பாயந்து சாலையிலேயே சரிந்து விழுந்தார். உடன் வந்த அவரது முன்முனுக்கு 3 குண்டுகள் உடலில் பாய்ந்தன.

உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதில் சவுரப் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். அநேரம் முன்முன் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சவுரப் குமார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என தெரியவராத நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதன் மூலம் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

நாளை (ஏப்.26) இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் ஜேடியு கட்சியின் இளம் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் பகை காரணமாக சவுரப் குமார் கொல்லப்பட்டாரா அல்லது வேறெதும் முன்விரோதமா என்ற போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்த சென்னை மருத்துவமனை! - Pakistan Girl Heart Transplant

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.