பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்து உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளனர். அப்போது எளிதில் சந்தேகிக்கும் வகையில் வித்தியாசமான இருந்த ஒரு பயணியின் பையை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளனர்.
பையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதில் திடீர் அதிர்ச்சி காத்திருந்தது. மஞ்சள் நிறத்திலான 10 அனகோண்டா பாம்புகளை அந்த பயணி கடத்தி வந்தது தெரியவந்தது. பாம்பை கடத்திய பயணியை உடனடியாக சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பாங்காக்கில் இருந்து பயணி எப்படி பாம்புகளை கடத்தி வந்தார் என்று விசாரித்து வருவதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பாங்காக்கில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவரது பையில் இருந்து மஞ்சள் நிறத்திலான 10 அனகோண்டா பாம்புகளை கைப்பற்றியதாக தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : 2024 பத்ம விருதுகள்: வெங்கையா நாயுடு, ரோகன் போபன்னா, பாடகி உஷா உதுப் ஆகியோருக்கு விருது வழங்கல்! - 2024 Padma Awards