ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்! யார்.. யார் தெரியுமா? - PM Modi Oath Ceremony

3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளம் பிரதமர் பிரச்சந்தா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனார்.

Etv Bharat
Sheikh Hasina, Narendra Modi, Pushpa Kamal Dahal (Photo/ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 12:34 PM IST

டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளம் பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

புதன்கிழமை (ஜூன்.5) நேபாளம் பிரதமர் பிரசந்தாவுடனான தொலைபேசி உரையாடலின் போது பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நேபாளம் பிரதமர் பிரசந்தா கலந்து கொள்வது குறித்து நேபாள பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.

அதேபோல் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து நாளை (ஜூன்.7) சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடையும் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதனிடையே வங்கதேசம் - இந்தியா இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரு நாடுகளின் சார்பிலும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 8ஆம் தேதி 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதேநேரம், கடந்த 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் தகுதியை இழந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

மறுபுறம் இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் வெறும் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 99 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.

இதையும் படிங்க: "நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்" - மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டம்! - Mallikarjun Kharge

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.