ETV Bharat / bharat

பாதுகாப்பு அச்சுறுத்தல் - தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு உத்தரவு! - Lok Sabha Election 2024

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:14 PM IST

Updated : Apr 10, 2024, 11:41 AM IST

டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு விஐபி பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை சார்பில் கூறிய நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎப் கமாண்டோக்கள் உட்பட மொத்தம் 33 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் வீட்டில் ஆயுதம் ஏந்திய 10 காவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 6 தனி அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் 12 பேர் 3 ஷிப்டுகள் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு ஷிப்டுக்கு 2 கண்காணிப்பாளர்கள், 3 ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : துப்பாக்கியுடன் முதலமைச்சருக்கு மாலை அணிவித்த நபர்... வீடியோ வைரல்! என்ன நடந்தது? - Lok Sabha Election 2024

Last Updated : Apr 10, 2024, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.