டெல்லி: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான பிரச்சனையில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் ஹெலிகாப்டரில் தப்பி வந்து டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால், அந்நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து வங்கதேசம் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
#WATCH | Delhi: All-party meeting underway in the Parliament on the issue of Bangladesh. EAM Dr S Jaishankar briefs the members of different political parties. pic.twitter.com/4Cl1rFRkyG
— ANI (@ANI) August 6, 2024
இதனிடையே, வங்கதேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணி நடந்தது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளது குறித்தும், அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அரசியல் மாற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை.. பதவியை துறந்த ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சம்.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!