மும்பை : மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. இதன் காரணமாக, சரத் பவார் ஓர் அணியாகவும் அவருடைய அண்ணன் மகன் அஜித் பவார் மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். சரத் பவார், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவாரும், அஜித் பவாரும் உரிமை கொண்டாடினர். இரு தரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அஜித் பவாருக்கு ஒதுக்கியுள்ளது.
அஜித் பவாருக்கே அதிக ஆதரவு நிர்வாகிகள் இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான படுகொலை என சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?