மும்பை: மும்பை விமான நிலையத்திலிருந்து மொரிஷியஸ்க்கு அதிகாலை 4.30 மணிக்குச் செல்ல வேண்டிய ஏர் மொரிஷியஸ் எம்.கே 749 ரக விமானம் (Air Mauritius flight MK 749) இயந்திரக் கோளாறு காரணமாகப் பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விமானம் புறப்படவில்லை.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது,"ஏர் மொரிஷியஸ் விமானம் அதிகாலை 4.30 மணிக்குக் கிளம்புவதால், பயணிகள் 3.45 மணிக்கு விமானம் உள்ளே ஏறினர். திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் புறப்படாததால், விமானத்தின் உள்ளே பயணிகள் இருந்தனர். வெளியே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. மேலும், விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் பயணிகள் அனைவரும் கடும் அவதிப்பட்டனர்.
இதில், விமானத்திலிருந்த பானுடுட் பூலாக்கி (78) என்ற பெண் பயணி ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமப்பட்டார். உடனடியாக, விமான நிலைய மருத்துவ உதவி மையம் மற்றும் ஏர் மொரிஷியஸ் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அந்தப் பயணியை விமானத்தின் பின்புறம் படுக்க வைத்தோம்" எனப் பயணி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து மற்றொரு பயணி கூறுகையில், "ஏர் மொரிஷியஸ் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக 5 மணி நேரத்திற்கு மேலாகப் புறப்படாததால் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: உ.பியில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 8 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு!