பெங்களூரு : 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
Swasthya Adhikar: ஆரோக்கியத்திற்கான உரிமைச் சட்டம். அனைவருக்கும் இலவச மருந்துகள், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்குதல்.
Shram ka Samman: ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக 400 ரூபாயாக நிர்ணயிப்பது. தேசிய அளவில் அனைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 400 ரூபாய் நிர்ணயிப்பது.
Shahari Rozgar Guarantee: பொது உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புதல், காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நகரங்களை உருமாற்றுதல் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்று நகர்ப்புறங்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்.
Samajik Suraksha: ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு உள்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவான சமூகப் பாதுகாப்பு வழங்குதல்.
Surakshit Rozgar: பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் விரோத சட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வு மற்றும் தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்த பொருத்தமான திருத்தங்களைச் செய்வது என 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிஜார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : கனடாவில் இந்திய வம்சாவளி குடும்பத்துடன் உயிரிழப்பு! என்ன நடந்தது?