ETV Bharat / bharat

ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவுகள் - Exit polls of two States - EXIT POLLS OF TWO STATES

ஹரியானாவைப் பொருத்தவரை, 7 கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணி முன்னிலை பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 8:49 PM IST

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

ஹரியானாவைப் பொருத்தவரை, 7 கருத்துக் கணிப்புகள் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணி முன்னிலை பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இதர 4 கருத்துக் கணிப்புகளின்படி அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிங்க: ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல்: 5 மணி நிலவரப்படி 61% வாக்குப்பதிவு

ஹரியானாவில் உள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி செய்தாலும், ஹரியானாவில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்க இயலாமல் போகலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் 8-ம் தேதி ஒரே கட்டமாக அறிவிக்கப்பட உள்ளன. இரு மாநிலங்களிலும் 90 தொகுதிகள் உள்ளதால் ஆட்சியைக் கைப்பற்ற 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஹரியானா கருத்துக் கணிப்பு முடிவுகள்:

ஆய்வு நிறுவனங்கள்பாஜககாங்.கூட்டணிஜேஜபி கூட்டணிஐஎன்எல்டி கூட்டணிஆம் ஆத்மி இதர
டைனிக் பாஸ்கர்19-2944-540-11-50-14-9
துருவ் ரிசர்ச்22-3250-640002-8
ஜிஸ்ட் -டிஐஎஃப் ரிசர்ச்29-3745-5300-204-6
பீப்புள்ஸ் பல்ஸ்20-3249-610-12-303-5
ரிபப்ளிக் பாரத் - மேட்ரைஸ்18-2455-620-33-602-5
ரிபப்ளிக் டிவி - பி மார்க்27-3551-6103-600-0
என்டிடிவி27540306

ஜம்மு - காஷ்மீர் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

ஆய்வு நிறுவனங்கள்பாஜககாங். +என்சிபிடிபி இதர
ஆக்சிஸ் மை இந்தியா24-3435-454-68-23
டைனிக் பாஸ்கர்20-2535-404-712-18
இந்தியா டுடே - சி வோட்டர்27-3240-486-126-11
பீப்பிள்ஸ் பல்ஸ்23-2746-507-114-6
என்டிடிவி2742714
ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.