ETV Bharat / bharat

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த்! - ரஜினிகாந்த்

Rajinikanth: ஜாம்நகரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் கலந்துக்கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்பு
அம்பானி இல்ல திருமண விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 12:45 PM IST

ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ப்ரீ வெட்டிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்க பிரபல தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், சினிமா நட்சத்திரங்கள், பல்துறை கலைஞர்கள் என இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று ஏராளாமான பிரபலங்கள் ஜாம்நகர் வந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முதல் நாள் நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா, தொழிலதிபர்கள் கவுதம் அதானி, நந்தன் நில்கேனி, அடார் பூனாவாலா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆன்மிக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல பாப் பாடகி ரிஹானாவின் கான்சர்ட் நிகழ்வு நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நட்சத்திர பிரபலங்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், நிறைய பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து இயக்குநர் அட்லி தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று (மார்ச் 3) ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்துக் கொண்டுள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப் பச்சன் அவரது குடும்பத்துடன் கலந்து கொண்டார். முன்னதாக, 2 ஆம் நாள் நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், அமீர் கான், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்று மதியம் சென்னை வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.