ETV Bharat / bharat

சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு வழக்கு: போலீஸ் காவலில் இருந்த ஆயுத சப்ளையர் தற்கொலை! - salman Khan Case Accused Suicide - SALMAN KHAN CASE ACCUSED SUICIDE

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அனுஜ்க தபான், போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:43 PM IST

Updated : May 1, 2024, 3:53 PM IST

மும்பை: கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அபார்மண்டஸ் முன்பு, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவருக்கும் ஆயுத சப்ளை செய்ததாக அனுஜ் தபான், சோனுகுமார் பிஷ்னாய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முதல் பஞ்சாப்பில் தலைமறைவாகி இருந்த அனுஜ் தபானை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

வழக்கு தொடர்பான விசாரணைக்கு மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சோனுகுமார் பிஷ்னாய் தவிர்த்து அனுஜ் தபான், விக்கி குப்தா, சாகட்ர் பால் ஆகிய மூன்று பேரை மே 8ஆம் தேதி வரை மகாராஷ்டிர குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதில் சோனுகுமார் பிஷ்னாய் மட்டும் மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மும்பை போலீசார் அனுஜ் தபானை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ் தபான் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மும்பையில் உள்ள ஜிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜ் தபான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணத்திற்காக அனுஜ் தபான் தற்கொலைக்கு முயன்றார் என தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம், மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ் தபான் உயிரிழந்ததை லாக் அப் மரணமாக கருதி அவரை விசாரணையில் எடுத்த அனைத்து காவலர்களிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக மகாராஷ்டிர மாநில மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஆபாச வீடியோ விவகாரம்: எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்! - Karnataka Prajwal Revanna Case

Last Updated : May 1, 2024, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.