ETV Bharat / bharat

ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி ஐசியுவில் அனுமதி! உண்ணாவிரதத்தால் உடல் நலக்கோளாறு! - Atishi Admitted in hospital

உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
AAP leader Atishi being taken to hospital after her health deteriorates (Screen grab from ANI video on X)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 10:05 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் காலிக் குடங்கள், டிரெம்களை கொண்டு தண்ணீருக்காக அலை மோதுகின்றனர். அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து போதிய அளவில் டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரவேண்டிய தண்ணீர் பெற்றுத் தருமாறு ஆம் ஆத்மி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 22ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதை அடுத்து இன்று (ஜூன்.25) அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள லோக் நாயக ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் அவரது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சீரற்ற நிலைக்கு சென்றதாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (ஜூன்.24) டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், எனது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து, எடையும் குறைந்துவிட்டது.

மேலும், உடலில் கீட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது, இது நீண்ட காலத்திற்கு உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கும். என் உடல் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அரியானாவில் இருந்து தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்து இருந்தார்.

கடந்த மூன்று வாரங்களாக யமுனை ஆற்றில் இருந்து டெல்லிக்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டில் நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன்கள் வரை அரியானா அரசு குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரியானா அரசு யமுனை ஆற்றில் இருந்து வழங்க வேண்டிய நீரில் 100 மில்லியன் கேலன்களை குறைத்தால், டெல்லியில் 28 லட்சம் மக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிஷி தெரிவித்து இருந்தார்.

இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, ஆம் ஆத்மி குழுவினர் அரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நயப் சிங் சைனி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரளம் பெயர் மாற்றம்: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்! - Keralam Name Change

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.