ETV Bharat / bharat

தாய் ரூ.5 ஆயிரம் தராததால் ஆத்திரம்.. 2 குழந்தைகளை கொன்ற கொடூரம்! போலீசார் என்கவுன்டர் - என்ன நடந்தது? - Uttar pradesh man killed 2 children - UTTAR PRADESH MAN KILLED 2 CHILDREN

தாய் 5 ஆயிரம் ரூபாய் கடன் தராத ஆத்திரத்தில் அவரது இரு குழந்தைகளை கொன்ற நபரை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 1:21 PM IST

Updated : Apr 3, 2024, 3:23 PM IST

பாதுன்: உத்தர பிரதேசம் பாதுன் அடுத்த சவுக்கி மந்தி பகுதியில் சஜீத் என்பவர் சலூன் கடை நடத்தி வந்து உள்ளார். அவரது மனைவிக்கு பிரசவம் பார்ப்பதற்காக தனது நெருங்கிய நண்பர்களிடம் பணம் கேட்டு உள்ளார். அதில் பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாய் தருமாறும் சஜித் கேட்டு உள்ளார்.

அதற்கு அந்த பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஜீத், வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டு இருந்த பெண்ணின் இரு குழந்தைகளை கழுத்தில் கூர்மையான ஆயுதங்களை கொண்டு வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. மூன்றாவது குழந்தையை சஜீத் கொல்ல முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், அதை கண்ட மூதாட்டி ஒருவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து சஜீத் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தாக்கிவிட்டு சஜீத் தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சஜீத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சஜீத் மீது கொண்ட ஆத்திரத்தில் அவரது சலூன் கடைக்கு அப்பகுதி மக்கள் தீவைத்தனர். மனைவியின் பிரசவத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் தராத ஆத்திரத்தில் இரண்டு குழந்தைகளை சவரத் தொழிலாளி கொலை செய்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மூன்றாவது சிறுவன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சம்பவ இடத்தில் சஜீத்தின் சகோதரர் ஜாவத் இருந்ததாகவும் தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : "Pure Veg Mode": சோமேட்டோவுக்கு எதிராக திரும்பிய நெட்டிசன்கள் - அந்தர் பல்டி அடித்த சோமேட்டோ சிஇஓ!

Last Updated : Apr 3, 2024, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.