ETV Bharat / bharat

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயரும் அகவிலைப்படி!: தீபாவளிக்கு முன் எவ்வளவு கிடைக்கும்? - central govt DA Hike - CENTRAL GOVT DA HIKE

ரூ.18 ஆயிரம் அடிப்படைச் சம்பளம் கொண்ட ஓர் ஊழியர், தற்போது ரூ.9 ஆயிரம் அகவிலைப்படி பெறுகிறார் எனில், 3 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவருக்கு மாதம் ரூ.540 அகவிலைப்படி அதிகரிக்கலாம். 4 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால் அகவிலைப்படி ரூ.9,720 ஆக அதிகரிக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 7:27 PM IST

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் அகவிலைப்படி 4 % அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அடிப்படை ஊதியத்தில் 50% ஆக உள்ளது. இந்நிலையில் அரசுத் துறை வட்டாரங்களில் தற்போது உலவும் தகவல்படி, அரசாங்கம் அகவிலைப்படியை மேலும் 3 முதல் 4 % உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீட்டு கட்டமைப்பில் அகவிலைப்படி முக்கிய அங்கமாக உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டிற்கு ஏற்ப அவர்களின் ஊதியத்தை சரிசெய்வதன் மூலம் பணவீக்கத்தை சமாளிக்க இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

உதாரணமாக, ரூ.18 ஆயிரம் அடிப்படைச் சம்பளம் கொண்ட ஓர் ஊழியர், தற்போது ரூ.9 ஆயிரம் அகவிலைப்படி பெறுகிறார் எனில், 3 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவருக்கு மாதம் ரூ.540 அகவிலைப்படி அதிகரிக்கலாம். 4 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டால் அகவிலைப்படி ரூ.9,720 ஆக அதிகரிக்கும். இது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைக்கும் அரசின் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

ஊழியர்கள் பணவீக்க அழுத்தங்களில் இருக்கும் இக்கட்டான நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) 12 மாத சராசரியைக் கொண்ட அகவிலைப்படி கணக்கீடானது, சம்பளத் திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் அணுகுமுறை பொருளாதார நடப்புகளுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் உலாவிய நான்கு வெளிநாட்டினர் பெங்களூருவில் கைது!

அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே இதுகுறித்து தீவிர எதிர்பார்ப்பு நிலவுகிறது. வழக்கமாக அரசு ஜனவரி மற்றும் ஜூலையில் அகவிலைப்படியை மதிப்பாய்வு செய்கிறது. ஆனால் மார்ச் மற்றும் செப்டம்பரில் அதனை சரிசெய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் தற்போது வெளி வரத் துவங்கியுள்ளது. இது தவிர அகவிலைப்படியுடன், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (டிஆர்) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் சரியான நேர தலையீடுகளை நம்பியிருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கு மேலும் ஆதரவை அளிக்கும்.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், 8-வது ஊதியக் குழு குறித்த விவாதங்களும் கிளம்பியிருக்கின்றன. ஆனால், நிதித் துறை இணையமைச்சர் கூற்றுப்படி, இந்த ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை. அதிகரித்து வரும் கோரிக்கைகளுக்கு மத்தியில், அகவிலைப்படி உயர்வு போன்றவை மூலம் உடனடி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசின் கவனம் உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.