மகேந்ந்திரகர்க் : அரியானா மாநிலம் மகேந்திரகர்க் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஏறத்தாழ 35 முதல் 40 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து உன்ஹனி கிராமத்தில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 7 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 20 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று (ஏப்.11) ரம்ஜான் பண்டிகை காரணமாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளி எப்படி இயங்குகிறது என்ற கேள்வி எழுந்து உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா? - Lok Sabha Election 2024