கொழும்பு : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. விடுவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்களும் கொழும்புவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டதாக தூதரகம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
நடப்பாண்டில் இதுவரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 178 இந்திய மீனவர்கள் மற்றும் 23 இந்திய படகுகளை சிறை பிடித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது. இந்தியா - இலங்கை இடையே நீண்ட நாட்களாக மீனவர்கள் பிரச்சினை நடைபெற்று வரும் நிலையில், பாக் ஜலசந்தி பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி தாரைவார்த்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கொழும்புவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலில் கடந்த 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரைவார்த்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மேற்கொள்காட்டி காங்கிரஸ் எப்போதும் நம்ப முடியாத கட்சி என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க : தெலங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 பேர் பலி! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்? - Telangana Chemical Factory Blast