ETV Bharat / bharat

பிக்அப் வேன் - பேருந்து நேருக்கு நேர் மோதல்! 10 பேர் பலி! 27 பேர் படுகாயம்! - UP Road Accident 10 Dead - UP ROAD ACCIDENT 10 DEAD

உத்தர பிரதேசத்திப் பிக் அப் வாகனம் - பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Representative image (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 18, 2024, 2:26 PM IST

புலந்த்ஷாஹர்: உத்தர பிரதேச மாநிலம் புதான் - மீரட் மாநில நெடுஞ்சாலையில் பிக் அப் வாகனம் - பேருந்து நேருக்கு நோர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிக்சிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்தை தொடர்ந்து அங்கு திரண்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிக்கடி அந்த பகுதியில் அதிவேகமாக செல்லும் மோட்டர் சைக்கிள்களால் விபத்து ஏற்படுவதாகவும் அதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 27 பேருக்கு உயர் ரக சிகிச்சை வழங்குவதை முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: பேருந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை! தொடரும் பாலியல் சம்பவங்கள்! பெண் பாதுகாப்புக்கு கேள்வி? - Dehradun teen girl rape

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.