தமிழ்நாடு

tamil nadu

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மண்டல பூஜை விழா; 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

By

Published : Apr 13, 2023, 3:21 PM IST

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மண்டல பூஜை விழாவில் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அருகே உள்ள வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில். இங்கு பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று 48ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  

இந்த விழாவில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டியும், சாமி தரிசனம் செய்வதற்காகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக 48 நாட்கள் மண்டல பூஜை விரதம் இருந்த பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.  

அந்தவகையில் வெள்ளநாயக்கனேரி மட்டும் அல்லாது சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் வேண்டுதல் நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் 1008 பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்து, கோயிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மண்டல பூஜை விழாவை ஒட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.  

ABOUT THE AUTHOR

...view details