தமிழ்நாடு

tamil nadu

'குடிநீர் பற்றாக்குறையை காவிரிதான் தீர்க்கும்' - பி.ஆர். பாண்டியன்

By

Published : Jul 10, 2019, 7:23 PM IST

திருவாரூர்: "குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது காவிரி நீர்தான் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு ராசி மணல் அணை கட்டுவதற்கு முன் வரவேண்டும்" என்று, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

pr pandian

இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது, "காவிரி நீர் குறித்து அனைத்து அதிகாரங்களும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆணைய அனுமதியில்லாமல் தன்னிச்சையாகமேகதாது அணை கட்ட கர்நாடக அரசு விண்ணப்பித்ததை ஏற்று ஆய்வுக்கு மத்திய அரசின் நீர்வளத்துறை அனுமதி அளித்தது கண்டனத்திற்குரியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. ஆய்விற்கு மட்டும்தான் அனுமதி என்றும் அணை கட்ட முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்த நிலையில், கர்நாடக அரசின் அனுமதி பெறுவதற்கான ஆய்வு அறிக்கை முழுவதையும் வரும் 19ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எனவே அந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி, அதன் பிறகு அனுமதி பெற மத்திய சுற்றுச்சூழல் துறை முன் வரவேண்டும்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இதனை வலியுறுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் சுற்றுச்சுழல் துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது காவிரி நீர் மட்டும்தான். எனவே காவிரிக்கு மாற்று காவிரிதான் என்பதை உணர்ந்து காவிரி உபரி நீர் கடலுக்கு செல்வதை தடுத்து நிறுத்த ராசி மணல் அணை கட்டுவதற்கு அரசு முன் வரவேண்டும். அதற்குசட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி ஆணையத்திற்கு அனுப்பிவைத்து அனுமதி பெற வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு முழுவதும் நீரின்றி பாலைவனமாக மாறிவிடும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details