தமிழ்நாடு

tamil nadu

'ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை' - பொதுமக்கள் கருத்து

By

Published : Dec 29, 2020, 10:10 PM IST

சேலம்: ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மாறாக அனைத்திற்கும் பழகிவிட்டது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்து
பொதுமக்கள் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், தற்போது அவர் உடல் நலம் குறைவால் அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சர்ச்சில் கூறுகையில், "இந்த அறிவிப்பு குறித்து ர‌ஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம், ஆனால் மக்கள் மத்தியில் பெரிய தாக்கம் எதுவும் இல்லை. சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்ய தான் வருவதாக கூறிவிட்டு பின்பு வரவில்லை என்று கூறுகிறார்" என்றார்.

பொதுமக்கள் கருத்து

சூரமங்கலம் திமுக செயலாளர் ஜெயகுமார் தெரிவிக்கையில், "ஒரு நல்ல தலைவனுக்கு தேவையானது ஒரே நிலைபாடு. அது அவரிடம் இல்லை. இப்போது அவர் அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்குவது, அவருக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று வெளிப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘ஆளவிடுங்கடா...! அரசியலும் வேணாம் ஒன்னும் வேணாம்’ - ரஜினி முடிவிற்கு பொதுமக்கள் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details