ETV Bharat / state

"சமஸ்கிருதத்தை பாஜக நாடாளுமன்றத்தில் திணிக்கிறது" - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்! - THREE NEW CRIMINAL LAWS

THREE NEW CRIMINAL LAW: வந்தே பாரத், தேஜஸ் ரயில்களை தொடர்ந்து சட்டங்கள் பெயரை சமஸ்கிருத பெயரில் வைத்துள்ளனர் எனவும், சமஸ்கிருத மொழியை நாடாளுமன்றத்தில் மறைமுகமாக திணிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறார்கள் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 5:04 PM IST

சிபிஎம் பாலகிருஷ்ணன்
சிபிஎம் பாலகிருஷ்ணன் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் (ஐஇசி) சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய சாக்ஷியா அனிதியம், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

சிபிஎம் பாலகிருஷ்ணன் உரை (credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக வழக்கறிஞர் அணி சார்பாக சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்தியா மீண்டும் ஒரு அடிமை நாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 3 சட்டத் திருத்தங்களை மீண்டும் விவாதிக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறை சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம்.

முழுக்க முழுக்க தேசம் காக்கும் போராட்டமாக இது அமைந்துள்ளது. தெற்கு முனையில் இருந்து தொடங்கி இருக்கக்கூடிய இந்த போராட்டம் நாளை இந்தியாவில் உள்ள எட்டுத்திக்கிலும் ஒலிக்கப் போகிறது. தமிழ்நாட்டில் தொடங்கும் போராட்டங்கள் முதலில் பார்ப்பதற்கு வேலை செய்யாதது போல் இருக்கும், பிறகு இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற போராட்டக்களமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

நீட்டை எதிர்த்து நாடு முழுவதும் இன்று போராட்டம் வெடித்துள்ளது. குஜராத்திலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நீட்டை வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மாநிலங்களை சார்ந்தவர்கள் வழக்கு போட்டுள்ளனர். இந்த நீட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதன் முதலில் குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான்.

இந்தப் போராட்டத்திற்கு பாஜக அரசு எப்படி பதில் சொல்லப் போகிறது? வந்தே பாரத் என்று ரயில் விட்டார்கள், தேஜஸ் என்று ரயில் விட்டார்கள், ஆட்டை கடித்து மாட்டை கடித்து இன்று சட்டங்கள் பெயரை சமஸ்கிருத பெயரில் வைத்துள்ளனர். சமஸ்கிருத மொழியை நாடாளுமன்றத்தில் மறைமுகமாக திணிக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள். இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

இந்த சட்டங்கள் மீது விவாதம் நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் பல குழப்பம் வரும். இந்தச் சட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகளை முடமாக்கி விடலாம், யாரை வேண்டுமானாலும் தீவிரவாதியாக முத்திரை குத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எடுத்தோம் கவுத்தோம் என்று மாற்றினால் பல குழப்பங்களை ஏற்படுத்தும். வருகிற 12ஆம் தேதி முதல் 15 வரை இந்த 3 சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற உள்ளது. மோடி தப்புக்கணக்கு போட்டு விடக்கூடாது" என்றார்.

இதையும் படிங்க: "இந்துத்துவாவை மக்கள் மீது திணிக்கிறது" - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பத்திரிகையாளர் என்.ராம் பேச்சு! - Three NEW CRIMINAL LAWS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.