ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பரத்தேர் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை ஆடி 18க்கு மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தைகள் விளையாட்டு தேரான சப்பரத்தேரை வாங்கி, அதில் தங்களுக்கு பிடித்த சாமி படத்தை வைத்து தெருக்களில் இழுத்து சென்று விளையாடுவார்கள். சப்பரத்தேர் வாங்க வசதி இல்லாதவா்கள் தீபெட்டியில் தேர் செய்து விளையாடுவார்கள்.
ஆடிப்பெருக்கு விழா; சப்பரத்தேர் விற்பனை மந்தம்! கவலையுடன் கூறும் ஆசாரி!
அரியலூர்: ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ள நிலையில் சப்பரத்தேர் விற்பனை மந்தமாக இருப்பதாக ஆசாரி பாலு கூறியுள்ளார்.
இது நாளடைவில் நகா்புறங்களில் மறைந்து வந்த சூழ்நிலையில் தற்போது கிராமபுரங்களிலும் மறைந்து வருகின்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சப்பரத்தேர் ஒன்று கூட விற்பனையாகவில்லை என கவலையுடன் ஆசாரி பாலு கூறுகிறார்.
மேலும் தான் ஆண்டுக்கு 500 தேர் வரை விற்பனை செய்து வந்ததாகவும், இந்த ஆண்டுக்கான விற்பனை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் இதுவரை ஒன்று கூட விற்பனையாகமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பயன்படுத்தி விளையாடி வருவதால் விழாக்களின் சிறப்புகள் அனைத்தும் மறந்துபோய் வருவதாக வேதனை தெரிவித்தார்.