தமிழ்நாடு

tamil nadu

ஃபீல்டிங் பயிற்சி குறித்து மனம் திறந்த ஹர்மன்ப்ரீத்!

By

Published : Mar 26, 2020, 11:48 PM IST

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனக்கு மிகவும் பிடித்த ஃபீல்டிங் பற்றி மனம்திறந்துள்ளார்.

harmanpreet-kaur-reveals-her-favourite-fielding-drill
harmanpreet-kaur-reveals-her-favourite-fielding-drill

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக வளம்வருபவர், பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி, இறுதிப் போட்டிவரை அழைத்துச்சென்றார்.

இந்நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskHarman என்ற ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்.

அதில், மகளிர் பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்திலிருந்த ஹர்மன்ப்ரீத்திடம், உங்களுக்கு மிகவும் பிடித்த ஃபீல்டிங் பயிற்சி எது? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த கவுர், ‘எனக்கு பறந்து பந்தைப் பிடிப்பது தான் மிகவும் பிடிக்கும்’ என்று பதிவிட்டார்.

மேலும் ஹர்மன்ப்ரீத்தின் ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் தவறாமல் பதிலளித்துவருகிறார்.

இதையும் படிங்க:தோனியின் ரன் அவுட்டால் கப் கை மாறிய கதை - 2015 உலகக்கோப்பை ரீவைண்ட்!

ABOUT THE AUTHOR

...view details