ETV Bharat / sports

இந்தியா VS தென்னாப்பிரிக்கா..புதிய வரலாறு படைக்க போவது யார்? - T20 World cup

SA VS IND : டி 20 உலகக்கோப்பையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் இறுதி போட்டி நாளை (ஜுன் 29) நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு அணிகளும் கடந்து வந்த பாதை மற்றும் அதன் வரலாற்றை பற்றி சுருக்கமாக இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டீம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டீம் (Credits - AP photos)
author img

By PTI

Published : Jun 28, 2024, 9:08 PM IST

பார்படாஸ் : டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்குமான இறுதி போட்டி நாளை நடைபெறுகின்றது. இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு தோல்விகளையும் சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுமே கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம். இந்திய அணியை பொருத்தவரை லீக் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது. அதே போன்று தென்னாப்பிரிக்கா அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்தது. இரு அணிகளும் லீக் தொடரில் விளையாடி சூப்பர் 8க்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா குரூப் 1 பிரிவிலும், தென்னாப்பிரிக்கா அணி குரூப் 2 பிரிவிலும் தகுதி பெற்றது.

சூப்பர் 8 : சூப்பர் 8 குரூப் 2வில் முதலில், விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதே போல், சூப்பர் 8 குரூப் 1 இல் முதலில் விளையாடிய இந்தியா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதி போட்டி: அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல், அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிபோட்டி : இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே, கடந்த 10 ஆண்டுகளாக நாக் அவுட் சுற்றில் சொதப்புகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இப்படி அரையிறுதி, இறுதி என நாக் அவுட் போட்டிகளில் இந்தியா சொதப்பி வருகிறது. அதேபோல், நாக் அவுட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி காலம் காலமாக சொதப்பி வருகின்றது. இந்தியாவை காட்டிலும் சில போட்டிகளில் தென்னாப்பிரிக்கா போராடி தான் வெற்றியை பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் பெரிய அளவில் இன்னும் க்ளிக் ஆக வில்லை. இந்திய அணியில் பேட்டிங் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அதே போல் பந்து வீச்சிலும் சிறப்பாக தான் இருக்கிறது. இந்நிலையில் நாளை எந்த அணி வென்று வரலாற்றை மாற்றப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : டிஎன்பிஎல் திருவிழா ஆரம்பம்.. சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி! - TNPL 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.