ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை: 13 வருட ஏக்கத்தை போக்குமா இந்தியா.. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதல்! - T20 World Cup Final

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 10:43 AM IST

T20 World Cup 2024 Final: இன்று பார்படாஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள்(கோப்புப் படம்)
இந்தியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள்(கோப்புப் படம்) (Credits - AP Photos)

சென்னை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று (ஜூன் 29) இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு பார்படாஸ் கேன்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையில், இறுதி போட்டி என்பதால் ரத்தாகும் பட்சத்தில் நாளை (ஜூன் 30) ரிசர்வ் டேவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா அணி ஆரம்பத்தில் அயர்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றியுடன் உலகக் கோப்பை பயணத்தை துவக்கியது. பின்னர் பாகிஸ்தான் உடனான த்ரில் போட்டியில் பும்ராவின் அபாரமான பந்துவீச்சால் வெற்றி பெற்றது.

இதனைதொடர்ந்து இத்தொடரில் கத்துக்குட்டியாக நுழைந்து பெரிய அணிகளை வென்ற அமெரிக்காவை எளிதாக வென்றது. பின்னர் கனடாவுடனான போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், சூப்பர் 8 சுற்றில் ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதாக வென்று அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

கடந்த 2022 தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணியை அபாரமான பந்துவீச்சால் இந்தியா தோற்கடித்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணியும் தொடரின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் போட்டிகளில் இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை எளிதாக வென்ற தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் போராடி நூலிழையில் வென்றது. அதே நேரத்தில் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வென்று அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தானுடன் மோதியது.

ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களை தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது கடினம் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியை தனது அபாரமான பவுலர்கள் மூலம் தென் ஆப்பிரிக்கா ஊதித்தள்ளியது. ஒருபுறம் இந்தியா அணி கடந்த 13 வருடத்தில் 5 முறை ஐசிசி தொடர் இறுதி போட்டி, 3 அரையிறுதி தோல்விகள் என கடந்த 2011 உலகக் கோப்பைக்கு பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் இந்தியா வென்றதில்லை.

மேலும் கடைசியாக இந்தியா முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. மற்றொருபுறம் தென் ஆப்பிரிக்கா, கடந்த 1992இல் 50 ஓவர் உலகக் கோப்பை முதல் ஐசிசி தொடர்களில் பங்கேற்று வரும் நிலையில், 7 முறை அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் முறையாக தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் ஐசிசி தொடரில் பலம் வாய்ந்த அணியாக காட்சியளித்து அரையிறுதி வரை முன்னேறிய பிறகு, தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா அணியை ரசிகர்கள் அதிர்ஷ்டம் இல்லாத அணி என விமர்சித்து வந்தனர்.

ஆனால் இம்முறை விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம், ஏற்கனவே 2014, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.

இம்முறை தென் ஆப்பிரிக்கா ரசிகர்களின் 32 வருட ஏக்கத்திற்கு விடை கொடுப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் இந்தியா அணியின் 14 வருட வேட்கையை ரோகித் சர்மா நிறைவேற்றுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளதால் இன்றைய இறுதி பலப்பரீட்சையில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படிங்க: டிஎன்பிஎல் திருவிழா ஆரம்பம்.. சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.