தமிழ்நாடு

tamil nadu

கோவிட்-19: ‘மான்கட்டை’ சுட்டிக்காட்டி பொதுமக்களை வீட்டிலிருக்க சொன்ன அஸ்வின்!

By

Published : Mar 25, 2020, 5:15 PM IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

COVID-19: Ashwin uses 'Mankad' reference to ask people to stay indoor
COVID-19: Ashwin uses 'Mankad' reference to ask people to stay indoor

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் இப்பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், பொதுமக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லரை ‘மான்கட்’ முறையில் ரன் அவுட் செய்த புகைப்படத்தை பதிவிட்டு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில், இந்தப் புகைப்படத்தை எனது ரசிகர் ஒருவர் எனக்கு அனுப்பி, இச்செயல் நடந்து ஒரு வருடம் ஆகிறது என நினைவுப் படுத்தினார்.

தற்போது 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இந்தப் புகைப்படம் நல்ல எடுத்துக்காட்டாக அமையும். மேலும் இதன்மூலம் பொதுமக்கள் தமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறக்கூடாது. மீறினால் இதுபோல் தான் வெளியேற வேண்டியிருக்கும் என்று பதிவிட்டு, அந்தப் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதையும் படிங்க:கோவிட்-19: ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி அளித்த மெஸ்ஸி!

ABOUT THE AUTHOR

...view details