தமிழ்நாடு

tamil nadu

கிணற்றில் விழுந்த மயில்: விரைந்துசெயல்பட்ட தீயணைப்புத் துறையினர்

By

Published : Jun 19, 2020, 7:17 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மயிலை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

Tripattur peacock Recover
Tripattur peacock Recover

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னப்பம்பட்டி மோட்டுக்கொள்ளை பகுதியில் நாய்கள் துரத்தியதில் மயில் ஒன்று தடுமாறி கிணற்றில் விழுந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்ததன்பேரில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மயிலை மீட்டு திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், வனத் துறையினர் மயிலை வாணியம்பாடி அடுத்த மாத கடப்பா மலைப்பகுதியில் விடுவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details