தமிழ்நாடு

tamil nadu

மாற்று திறனாளிகளுக்கு கரோனா பரிசோதனை!

By

Published : Sep 11, 2020, 5:49 AM IST

பெரம்பலூர்: மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Perambalur Collector press release
Perambalur Collector press release

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுகளை எழுத உள்ள சொல்வதை எழுதுபவர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டய தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர் களில் சொல்வது எழுதுபவர் வேண்டிய சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னர் அவர்கள் விருப்பத்தின் பெயரில் தங்கள் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

கரோனா பரிசோதனையை மேற்கொள்வதில் சிரமம் இருந்தால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை 7010939925 என்ற அலைபேசி எண்ணிற்கு செப்டம்பர் 15-க்குள் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை தேர்வு மையத்திற்கு வருகை புரியும் போது உடன் கொண்டு வர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details