தமிழ்நாடு

tamil nadu

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்.. தமிழக அரசு அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 10:24 PM IST

பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குனராக கண்ணப்பனை நியமனம் செய்து இன்று (சனிக்கிழமை) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து துறை சார்ந்த தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக இருந்த அறிவொளி இன்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், அரசுத் தேர்வுகள் இயக்குனராக இருந்த சேதுராமவர்மாவுக்கு தொடக்கக்கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக லலிதா இருந்து வந்த நிலையில், அவருக்கு அரசுத் தேர்வுகள் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details