தமிழ்நாடு

tamil nadu

மசினகுடியில் தனியாக சுற்றித்திரிந்த குட்டியானை..தாயுடன் சேர்த்த வனத்துறை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 6:20 PM IST

தாயுடன் சேர்க்கப்பட்ட குட்டியானை
தாயை பிரிந்த குட்டியானை, வனத்துறையினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி:மசினகுடி அருகே மாயார் வனப்பகுதியில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர்.

மசினகுடி அருகே மாயார் வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் குட்டியானை சுற்றித்திரிவதாக சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் வனத்துறையினர் தாயை பிரிந்த குட்டி யானையை கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் தாய் யானை மற்றும் யானைக் கூட்டங்கள் அப்பகுதியில் தென்படாததால், இன்று ட்ரோன் கேமரா மூலமாக யானை கூட்டங்களை தேடி கண்டுபிடித்து, பிரிந்து வந்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details