மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநகரில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீரங்க ரங்கநாத பெருமாள் திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கு திருமங்கையாழ்வார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இந்நிலையில் புரட்டாசி மாத பிறப்பையொட்டு இக்கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகனுடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு வரவேற்பு அளித்து, கல்யாண ரங்கநாத பெருமாள் சன்னதி, திருமங்கையாழ்வார், யோகா நரசிம்மர் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.