தமிழ்நாடு

tamil nadu

போதிய பயணிகள் இல்லாததால் டெல்லி, சீரடி விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 5:39 PM IST

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சீரடி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்:

வழித்தடம் நேரம் விமானம்
சென்னை - சீரடி பிற்பகல் 2.40 ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம்
சென்னை - டெல்லி இரவு 9.05 விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
சீரடி - சென்னை பகல் 1.50 ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம்
டெல்லி - சென்னை இரவு 8.20 விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் டெல்லி, சீரடி ஆகிய வருகை, புறப்பாடு என 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், போதிய பயணிகள் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details