தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

10 நாட்களுக்கு முன்பு திருமணம்.. வழிப்பறியில் சிக்கிய புது மாப்பிள்ளை! - theft - THEFT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 8:09 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் பேச்சாவடி மேகனாப்பள்ளி சாலையைச் சேர்ந்த அன்பழகன் மனைவி மலர்க்கொடி (67). இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி காலை வீட்டின் அருகே சாலையில் நடைபயிற்சி செய்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த விஜயபாலன் (26) என்ற இளைஞர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து விஜயபாலனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்னதாக கீழையூர் பகுதியில் 4 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. 

இன்ஜினியரிங் பட்டதாரியான விஜயபாலன், ஆன்லைனில் 6 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி செலவு செய்து வந்த நிலையில், அந்த கடனை அடைப்பதற்காக பிரத்யேகமாக நம்பர் பிளேட் இல்லாத பைக்கை வாங்கி பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு காதல் திருமனம் நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட விஜயபாலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ABOUT THE AUTHOR

...view details