ஷவரில் குளித்த குட்டி விநாயகர்.. மழை வேண்டி சிறப்பு பூஜை! - Vinayagar Shower - VINAYAGAR SHOWER
Published : May 7, 2024, 6:41 PM IST
அரியலூர்: சின்னகடை பகுதியில் உள்ள பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில் மழை வேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் சின்னகடை பகுதியில் ராகு, கேதுவுடன் அமர்ந்துள்ள பிரசித்தி பெற்ற பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயத்தில், மழை வேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.
அதில், பாலபிரசன்ன சக்தி விநாயகர் சுவாமியைச் சுற்றி கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு, தண்ணீர், வெட்டிவேர், பன்னீர், திரவியபொடி கலந்து செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு, விநாயகப் பெருமானை தினந்தோறும் குளிர்வித்து வருகின்றனர். அதன்படி, இன்றும் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து, மனம் குளிர விநாயகரை வணங்கி வருகின்றனர். இது குறித்த வீடீயோ தற்போது வைரலாகி வருகிறது.