தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சிறந்த செவிலியர் விருது பெற்றவர் லஞ்சம் வாங்கினாரா? தீயாய் பரவும் வீடியோ! - NURSE BRIBE VIDEO - NURSE BRIBE VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 4:50 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர் நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் ஷீலா. இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இவர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் கையூட்டு பெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஷீலாவுக்கு சிறந்த செவிலியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் வழங்கிய நிலையில், தற்போது ஷீலா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரலாகி பேசுபொருளாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ஷீலா, நோயாளிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசராணை நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details