தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

லாட்ஜ் கேட்டை உடைத்து உள்ளே நுழந்த யானைக் கூட்டம்.. உடுமலை வைரல் வீடியோ! - Elephants Entered the Hotel - ELEPHANTS ENTERED THE HOTEL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 11:19 AM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில், தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி கட்டும் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு உணவு தேடி அந்த வழியாக வந்த காட்டு யானைக் கூட்டம், தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விடுதிக்குள் புகுந்து சுமார் 1 மணி நேரம் சுற்றித் திருந்தவிட்டு, மூடப்பட்டிருந்த கேட்டை உடைத்துக் கொண்டு யானைக் கூட்டம் வெளியே செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

நல்வாய்ப்பாக விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, யானை கேட்டை உடைத்துக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details