ராணுவ மருத்துவமனை அருகே காட்டு எருமைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வைரல்! - BUFFALOES FIGHT
Published : Nov 18, 2024, 7:15 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ள மாவட்டமாகும். இங்கு கரடி, யானை, புலி, மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் வன விலங்குகளால் சில நேரங்களில் அப்பகுதி மக்களை தாக்குவதால் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனை அருகே இரண்டு காட்டு எருமைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவு காட்டெருமைகள் சுற்றித் திரிகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த ஆண்டில் காட்டெருமை தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது காட்டெருமைகள் சண்டையிடும் காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.