தவெக தலைவர் விஜய் வெளியிடும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகம்! - ELLORUKKUMAANA THALAIVAR AMBEDKAR
Published : Dec 6, 2024, 5:13 PM IST
|Updated : Dec 6, 2024, 9:18 PM IST
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட, ஓய்வுபெற்ற நீதீயரசர் சந்துரு பெற்றுக்கொள்கிறார். நடிகர் மற்றும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருவதால், கிண்டி - போரூர் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்படுகிறது.இந்த நிகழ்வில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய். முதலில், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை வழங்குகிறார். முக்கியமாக நூலைத் தொகுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா நூல் உருவாக்கவுரையை நிகழ்த்துகிறார்.இந்த நூலை முதலாகப் பெற்றுக் கொள்ளும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு, அதை குறித்து சில நிமிடங்கள் சிறப்புரையாற்றுகிறார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Dec 6, 2024, 9:18 PM IST