தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் சேவைக்கு நடவடிக்கை - தேனியில் டிடிவி தினகரன் பிரச்சாரம் - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 9:01 AM IST

தேனி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி தினகரன் போடி மற்றும் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது, தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் பொதுமக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி தினகரன் பேசிய போது, "எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதற்கு நன்றி கடனாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினார். நான் எம்பியாக இருந்தபோது, தேனி தொகுதிக்கு செய்த திட்டங்கள் கிராமப்பகுதிகளில் போடப்பட்ட சாலைகள் இன்னும் அப்படியே இருக்கின்றது. அதன் பிறகு யாரும் வந்து செய்யவில்லை. மீண்டும் நீங்கள் சாலை அமைத்துத் தரவேண்டும் எனப் பல ஊர்களைச் சேர்ந்த கிராமத்தினர் என்னிடம் கோரிக்கை வைக்கின்றனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தொகுதிக்கான திட்டங்களைப் பெற்றுத் தந்தது போல், தற்போது உள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் உரிமையோடு திட்டங்களை பெற்றுத் தரக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். ஆர்.கே நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகள் டெபாசிட்டை இழந்து நான் மாபெரும் வெற்றியைப் பெற்றது போல், என்னை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிடம் உங்களது பிரதமர் வேட்பாளர் யார்? என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் சேவை திட்டம், வைகை அணையைத் தூர்வாருவதற்கான திட்டம்; மேலும் தேனி பகுதியில் சிலர் என்னிடம் புதியதாக அணை வேண்டுமென்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். அது குறித்து ஆய்வு செய்து வருகிறேன், விரைவில் அறிவிப்பும் வெளியிடுவேன்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details