தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தெலுங்கு ஊடகத்தின் டிரெண்ட்செட்டர் 'ஈநாடு' நாளிதழின் பொன்விழா கொண்டாட்டம்! - Eenadu Golden Jubilee - EENADU GOLDEN JUBILEE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 4:00 PM IST

Updated : Aug 10, 2024, 5:40 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் அதிகம் படிக்கப்படும் தெலுங்கு மொழி நாளிதழான 'ஈநாடு' இன்று தனது 50வது பொன் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. தெலுங்கானாவில் உள்ள ஈநாடு பத்திரிகையின் அலுவலகங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. 50 ஆண்டுகளில், வெறும் செய்தியை மட்டும் வழங்கும் அன்றாட நாளிதழாக காட்டிக் கொள்ளாமல் சமூகப் பொறுப்புள்ள ஊடக அமைப்பாக ஈநாடு தனது பணியை செம்மையாக செய்து வருகிறது. கடந்த 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் முதலாக உதயமான நாளிதழ், இந்தியாவின் ஊடகத்துறையில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. மறைந்த ராமோஜி ராவின் கருத்துக்களால் உருவான ஈநாடு என்ற ஜோதி, தகவல் புரட்சியை உருவாக்கி ஒவ்வொரு நாளும் விரிவடைந்து வருகிறது. வெறும் 4 ஆயிரத்து 500 தினசரி பதிப்பில் தொடங்கி, தற்போது 13 லட்சத்துக்கும் மேல் பதிப்புகளை வெளியிட்டு நம்பர் ஒன் தெலுங்கு நாளிதழாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. ஈநாடு நாளிதழ் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுடைந்து உள்ள நிலையில், அதை ஊழியர்கள் வாசகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  
Last Updated : Aug 10, 2024, 5:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details