உதகையில் மலையேறும் திறன்களை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்!
Published : Oct 27, 2024, 9:31 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த முத்தோரை பாலடா பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பல்லாயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் நிறுவனர் தின விழா பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் போது பள்ளி மாணவ மாணவியர்களின் மலையற்ற சாகசங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மலையேற்ற சாகசங்களை நடத்திய பள்ளி மாணவ மாணவிகள் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் செயல் முறை வழக்கம் செய்து காட்டினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். மலையேற்ற பயிற்சி, குதிரை சாகச பயிற்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி அசத்தியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, பேண்ட் கண்காட்சி, டிரம்ஸ் அழைப்பு, நடன விளக்கக்காட்சி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக ஆசிரியகர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.