தென்தமிழகத்தை புரட்டிப் போட்ட கனமழை... வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு நேரலை! - TN RAIN UPDATES
Published : Dec 13, 2024, 3:18 PM IST
|Updated : Dec 13, 2024, 3:27 PM IST
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ,கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தாமிரபரணி, ராம நதி, கடனா நதி ஆகியற்றிலும் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டோடுகிறது. குடியுிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் (டிசம்பர் 15) வங்கக்கடலில் அந்தமானை ஒட்டிய பகுதியில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையுில், தமிழகத்தின் மழை நிிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்...
Last Updated : Dec 13, 2024, 3:27 PM IST