தமிழக ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு- நேரலை! - tn governor tea party
Published : Aug 15, 2024, 5:07 PM IST
சென்னை:78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். இதேபோன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், 'முதல்வர் மருந்தகம்' முதல் முன்னாள் படை வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் உதவி வரை பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க தமிழகத்தின் ஆளுங்கட்சி மற்றும் பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைவர்களுக்கு ஆளுநர் ஆர. என்.ரவி சில தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதாக கூறி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை கூறியிருந்தார். இந்நிகழ்வின் நேரலை காட்சிகள்...