தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்! - MK Stalin Campaign In Dharmapuri - MK STALIN CAMPAIGN IN DHARMAPURI

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 7:03 PM IST

Updated : Mar 29, 2024, 7:45 PM IST

தருமபுரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் தருமபுரிக்கு வந்து, அங்கிருந்து தடங்கம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி  தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காட்சிகளை இந்த நேரலையில் காணலாம். தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் வருகையையொட்டி, பிரமாண்ட மேடை மற்றும் அலங்கார வளைவுகள், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் கொடிகள் கட்டப்பட்டு உள்ளது. பிரசாரத்திற்கான முன்னேற்பாடு பணிகளை தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்து பொதுக்கூட்ட மேடைக்கான தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். 
Last Updated : Mar 29, 2024, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details