பட்டையை கிளப்பிய 'எருது விடும் திருவிழா' - வெற்றிக்காக பாய்ந்தோடிய காளைகள்! - ERUTHU VIDUM VIZHA
Published : Dec 17, 2024, 11:33 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்பாலூர் கிராமத்தில் மார்கழி மாதம் தொடகத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான 'எருது விடும் திருவிழா' வெகு விமரிசையாக நேற்று டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த பாரம்பரிய எருது விடும் திருவிழாவில் கோயில் காளையை முதலில் களம் இறக்கி, அதன் பின்னர் உள்ளூர் காளைகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருந்திறங்கும் சுமார் 300 காளைகள் திருவிழாவில் களமிறக்கப்பட்டன.
வெற்றி இலக்கை நோக்கி ஓடிய காளைகளில், குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் காளைகளை வெற்றிக் காளைகளாக தேர்ந்தெடுக்கபட்டன. அவ்வாறு தேர்தெடுக்கப்படும் காளைகளுக்கு தகுந்த வெகுமதியுடன் கூடிய பாராட்டு பத்திரங்களை காளைக்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் வழங்கி விழாக்குழு நிர்வாகம் கௌரவித்தனர்.
இந்த எருது விடும் திருவிழாவை காண சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக கடலாடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.