தேனியில் களைகட்டிய ரேக்ளா ரேஸ் பந்தயம்.. சீறிப்பாய்ந்த 150 ஜோடி மாடுகள்!
Published : Mar 3, 2024, 6:42 PM IST
தேனி: பெரியகுளத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 150க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளி மான், கரிச்சான்மாடு, இளஞ்ஜோடி என 6 வகை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது, பெரியகுளம் சோத்துப்பாறை அணை சாலையில் சுமார் 8 கிலோமீட்டார் தூரம் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரியகுளத்தில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 150 ஜோடி மாடுகள் சீறிப் பாய்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.