பேருந்துக்காக காத்திருந்த முதியவர்.. திடீரென பாய்ந்த லாரி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Thanjavur Lorry accident CCTV - THANJAVUR LORRY ACCIDENT CCTV
Published : Aug 16, 2024, 10:00 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் இருந்து செம்மண் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரம் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த முதியவர் மீது மோதி, அருகில் இருந்த கோயிலின் வளைவு மீது முட்டி நின்றது.
இதில் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சிறு காயங்கள் இன்றி உயர் தப்பினார். விபத்து ஏற்பட்ட இடமானது, அப்பகுதியின் பேருந்து நிறுத்தம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், திடீரென லாரி மோதியதில் பலர் அதிர்ச்சியில் அலரத் தொடங்கியதால் அந்த இடமே பரபரப்பானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இன்றி அனைவரும் தப்பித்தனர். இந்நிலையில், இந்த சம்பவமானது, விபத்துக்குள்ளான லாரிக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.