கும்பகோணம் தனியார் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்! - TEACHERS DAY - TEACHERS DAY
Published : Sep 5, 2024, 4:54 PM IST
தஞ்சாவூர்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் தனியார்ப் பள்ளியில் ஆசிரியர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவருமான, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05-ஆம் நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முதல்வர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். முதலில் பள்ளிக்கு வருகை புரிந்த ஆசியர்களுக்கு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்குப் பள்ளி மாணவர்கள் இருபுறமும் ஆசிரியர்களுடன் நின்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்களையும், கல்வியையும் போற்றி பெருமைப்படுத்தும் வரிகளைக் கொண்ட பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடி அசத்தினர். பின்னர் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.